
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து மழை குறுக்கிட்டத்தால் முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
இதில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதில் சில இந்திய வீரர்கள் தவறான ஷாட்களை ஆடியதால் இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் விராட் கோலி 64 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்திருந்தார்.அவர் 42 இன்னிங்ஸில் 2097 ரன்களை அடித்திருந்தார். தற்போது விராட் கோலி 57 இன்னிங்ஸில் இந்த சாதனை முறியடித்து தற்போது 2101 ரன்களை அடித்திருக்கிறார்.