
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் திணறி வருவதால் அவருடைய ஃபார்ம் முடிவுக்கு வந்தது. இனி அவரால் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பவே முடியாது என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் விராட் கோலியின் ரசிகர்களும், அணியின் நிர்வாகமும் அவரின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவர் ஃபார்மிற்கு வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகவும் மோசமான ஆட்டத்தினால் பார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி எப்படியாவது இந்த சரிவிலிருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியிலும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதோடு தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் ஓய்வெடுத்த அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாட இருப்பதினால் இந்த இரண்டாவது போட்டியிலாவது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.