ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்திடம் பேசிட்டுத்தான் முடிவெடுக்கணும் - விராட் கோலி
ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் பேசிவிட்டு பிரேக் எடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியிருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் விராட் கோலி, 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலியின் மோசமான பேட்டிங் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக இருந்துவந்த நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமான இந்திய அணியின் கேப்டன்சி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து கோலி விலகினார்.
எனவே கோலி கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் இந்த ஐபிஎல்லில் ஆடியதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் 13 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட கோலி அடிக்கவில்லை. அவரது மோசமான ஃபார்ம் தொடர்ந்துவந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கோலி 54 பந்தில் 73 ரன்கள் அடித்து ஆர்சிபியை வெற்றி பெறச்செய்தார். அவரது இந்த இன்னிங்ஸ் ஆர்சிபிக்கு மட்டுமல்லாது, இந்திய அணிக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் அளித்துள்ளது.
டி20 உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருப்பதால் அவரது மோசமான ஃபார்ம் இந்திய் அணிக்கு கவலையளித்த நிலையில், கோலி மீண்டும் ஃபார்முக்கு வர, பல முன்னாள் வீரர்கள் பல அறிவுரைகளை வழங்கிவந்தனர். அதில், கோலி பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதான அறிவுரையாக இருந்தது. அதுவும் கோலியை மிக அருகில் இருந்து 4-5 வருடங்கள் பார்த்த ரவி சாஸ்திரி இந்த அறிவுரையை கூறியிருந்தார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான அருமையான இன்னிங்ஸுக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய கோலியிடம், பிரேக் எடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, என்னை கடந்த பல வருடங்களாக பக்கத்தில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் ரவி Bhai நான் பிரேக் எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
Trending
தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவந்திருக்கிறேன். அதனால் அப்படி கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ராகுல் டிராவிட் (தற்போதைய இந்திய அணி பயிற்சியாளர்) மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டும். எனக்கும் அணிக்கும் எந்த பாதகமும் இல்லாத வகையில் முடிவெடுக்க வேண்டும் என்று கோலி கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now