70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி - பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கோலி, பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 48 சதங்கள் உள்பட 13,437 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் உள்பட 8,676 ரன்களும் குவித்துள்ளார். இந்த நிலையில், வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி விராட் கோலியின் 35ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய தினம், இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டியை காண வரும் 70,000 ரசிகர்களுக்கும் விராட் கோலி முகம் பதித்த முகமூடி வழங்க பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகின்றது.
Trending
மேலும், இன்னிங்ஸ் இடைவேளையின்போது வாணவேடிக்கைகளும், கேக் வெட்டவும் திட்டமிடபட்டுள்ளதாகவும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு ஐசிசியின் அனுமதி கிடைத்தால் அந்த நாளை கோலிக்கு சிறப்பானதாக மாற்றுவோம் என பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சினேகாசிஷ் கங்குலி, “70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். விராட் கோலி மைதானத்துக்குள் நடந்து வரும்போது ரசிகர்களை முகமூடி அணிய வலியுறுத்துவோம். மைதானத்தில் கேக் வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நாளை விராட் கோலிக்கு சிறப்பானதாக மாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now