Advertisement

மிடில் ஆர்டரை வலிமைப்படுத்த வேண்டும் - ரோஹித் சர்மா

ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியம். அவர் இன்னும் அணியின் தலைவர்தான் எனவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
Want Middle Order Batters To Prepare For Worst Case Scenario: Rohit Sharma
Want Middle Order Batters To Prepare For Worst Case Scenario: Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 10, 2021 • 11:29 AM

இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 10, 2021 • 11:29 AM

இதற்கிடையே நேற்று முன்தினம் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Trending

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும் போது, “டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன் ஒத்து வராது என்பதால் ஒருநாள் போட்டிக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “அணியில் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்த நான் விரும்புகிறேன். 10 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழக்கும் சூழ்நிலையில் எப்படி விளையாடவேண்டும் என்பதற்கு தயார்படுத்த விரும்புகிறேன்.

அணி தொடக்கத்தில் தடுமாறும்போது 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் உள்ளன. அதை சோதித்து பார்க்க வேண்டும். 10 ரன்னுக்கு 2 விக்கெட் விழுந்த பிறகு வீரர் ஒருவர் என்ன ஷாட் விளையாடுகிறார் என்று மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை.

வர்ணணையாளர்கள், இந்திய மக்கள், இது அணியின் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கேப்டன் விளையாடும் போது முன்னணியில் நிற்க வேண்டும். மற்ற எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்க வேண்டும். கேப்டன் பின்னால் நிற்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால் அவர் அனைவரையும் சுற்றி இருப்பதை உறுதி செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement