
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் வரும் 17ஆம் தேதி டெல்லியில் பலப் பரிட்சை நடத்துகின்றன. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெறும் உத்வேகத்துடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ராகுலுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ராகுலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய நிலையில், தற்போது அந்த பட்டியலில் வாசீம் ஜாஃபரும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்த பதினோரு வீரர்களை களம் இறங்குவது சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதன்படி தொடக்க வீரராக அவர் கே எல் ராகுலை நீக்கிவிட்டு, ஷுப்மன் கில்லை ரோகித் சர்மாவின் ஜோடியாக சேர்த்துள்ளார். நடுவரசையில் புஜாரா, விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ள வாசீம் ஜாஃபர், ஐந்தாவது வீரராக சூரிய குமார் யாதவை நீக்கி விட்டு ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.