
Jofra Archer Sends Yashasvi Jaiswal back: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாள்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த அவர், தற்சமயம் மீண்டும் டெஸ்ட் அணியில் தனது கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஆர்ச்சருக்கு இடம் கிடைத்தது. இந்நிலையில் இன்று ஆர்ச்சர் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் ஓவரின் மூன்றாவது பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சார் வீசினார்.