
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டும், இரண்டாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றும் அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அபாரமான தொடக்கத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணியானது, அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்து போதிய ரன்களைச் சேர்க்காததே தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு பிறகு செய்தியாளர் சந்தீப்பின் போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிடம், அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால் அவர் கோபமடைந்து பத்திரிகையாளர்களை கண்டித்து பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய பாபர் அசாம், “அணியில் எந்தவொரு வீரரும் கேப்டனின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படவில்லை. அனைவரும் தகுதி அடிப்படையில் அணிக்கு வந்துள்ளனர். பாருங்கள், ஒரு வீரர் செயல்பட முடியாதபோது, அந்த வீரர் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம், நீங்கள்தான் இவற்றைச் செய்கிறீர்கள். இதை பெரிதுபடுத்தி கொண்டு வருபவர்கள் நீங்கள் தான்.