
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வநிந்து ஹசரங்காவுக்கு பதிலாக ஃபசல்ஹக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்படி இன்னிங்ஸின் 3ஆவது ஓவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட ஷுப்மன் கில் பந்தை முழுமையாக தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகியும் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.