Advertisement

இணையத்தில் வைரலாகும் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
இணையத்தில் வைரலாகும் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி!
இணையத்தில் வைரலாகும் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 09, 2025 • 11:22 AM

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. மழை காரணமாக 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 09, 2025 • 11:22 AM

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்தது.

Trending

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கமிந்து மெண்டிஸ் 64 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் இலங்கை அணி 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் மீண்டும் தனது ஃபீல்டிங் திறனை ரசிகர்களிடம் காட்டினார். அதன்படி, இப்போட்டியின் 4ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்தை மிட் ஆன் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். ஆனால் அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் பந்தை பிடித்ததுடன் அபாரமான டைவை அடித்து ரன் அவுட்டாக்கினார். 

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement