
Prasidh Krishna And Harry Brook Video: ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்தின் ஹாரி புரூக் மற்றும் இந்தியாவின் பிரஷித் கிருஷ்ணா இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த காணொளி வரைலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போடியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 364 ரான்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த இன்னிங்ஸில் ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஸாக் கிரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 09 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி நளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.