
Seattle Orcas vs MI New York: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 97 ரன்களை விளாசியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
டல்லாஸில் உள்ள கிராண்ட் பியர் மைதானத்தில் எம்ஐ நியூயார் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணியில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் சதமடித்ததுடன் 107 ரன்களையும், தஜிந்தர் தில்லான் 95 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடிய சியாட்டில் ஆர்காஸ் அணியில் கைல் மேயர்ஸ் 37 ரன்னிலும், சிக்கந்தர் ரஸா 30 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் 97 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.