ஒரே ஓவரில் ரோஹித், கோலியை காலிசெய்த அல்ஸாரி!
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விரித்த வலையில் ஒரே ஓவரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் 3ஆவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் நீண்ட நாட்கள் கழித்து ரோஹித் - தவான் ஜோடி ஓப்பனிங் களமிறங்கினர்.
ஆனால் அவர்களின் பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வழக்கமாக தொடக்கத்தில் நிதானமாக விளையாடி, பிட்ச் -ன் தன்மையை புரிந்துக்கொண்டு பவுண்டரிகள் அடிப்பவர் ரோஹித் சர்மா. ஆனால் இந்த போட்டியில் திடீரென தொடக்கம் முதலே பவுண்டரிகளை அடித்து தள்ளினார். குறிப்பாக அல்ஸாரி ஜோசப் வீசிய 2ஆவது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார்.
Trending
இதையடுத்து 4ஆவது ஓவரை வீச வந்த ஜோசப், ரோஹித் சர்மா பவுண்டரி அடிப்பதற்காக நிறைய கட் ஷாட்களை முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்துக்கொண்டார். இதனையடுத்து ரோஹித்தின் உடல் பகுதிக்கு நேராக இன் ஸ்விங் பந்தை போட, எதிர்பார்த்ததை போலவே ரோகித் சர்மா ஆர்வக்கோளாரில் உடலுக்கு வந்த பந்தை கட்ஷாட் ஆட முற்பட்டார். அப்போது பந்து இன்சைட் எட்ஜாகி மிடில் ஸ்டம்ப் காலியானது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே ஓவரில் ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலிக்கு 2ஆவது பந்தை விராட் கோலிக்கு டவுன் தி லெக் சைட் காலுக்கு நேராக அல்சாரி ஜோசப் வீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விராட் கோலி தடுத்தே தீர வேண்டும் என பின் திசையில் அடிக்க, அது கீப்பரிடம் நேராக கேட்ச்சாக சென்றது. இதனால் ஒரே ஓவரில் ரோகித் 13 ரன்களுக்கும், விராட் கோலி டக் அவுட்டாகியும் அதிர்ச்சி கொடுத்து வெளியேறினர்.
இந்த பிட்ச்-ல் முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். முதல் போட்டியில் கூட இந்திய பவுலிங்கை தேர்வு செய்து தான் வெஸ்ட் இண்டீஸை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டினார். ஆனால் இன்று திடீரென டாஸை வென்ற போதும், ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்து ரிஸ்க் எடுத்துள்ளார். இதன் விளைவு இந்திய அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
Win Big, Make Your Cricket Tales Now