
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது நியூசிலாந்துக்கு எதிரான படு தோல்வி குறித்தும், பேட்டர்கள் சோபிக்க தவறியது குறித்தும், ஆஸ்திரேலிய தொடரில் எவ்வாறு செயல்படவுள்ளோம் என்பது குறித்து கௌதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்மீது சமூக ஊடகங்களில் வைக்கப்படும் பேச்சுகள், விமர்சனங்கள் என் வாழ்க்கையிலோ அல்லது எந்த விஷயத்திலோ, வேறு யாருடைய வாழ்க்கையிலும் என்ன வித்தியாசத்தை ஏற்படுதியதா? அதுபோல் எனக்கு எதுவும் தெரியவில்லை.