இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்குm இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Trending
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டி20 அணிக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என்றும், அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பெப்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை லியாம் லிவிங்ஸ்டோன் வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதவிர்த்து இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோரையு இணைப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான இந்த அணியில் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இளம் வீரரான ஆண்ட்ரூ ஜுவெலும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர்களைத் தவிர்த்து பிராண்டன் கிங், எவின் லூயிஸ், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குடகேஷ் மோட்டி ஆகியோருடன் ரோஸ்டன் சேஸ், கேசி கார்டி, ஜெய்டன் சீல்ஸ் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். இதனால் இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கே), ஜூவல் ஆண்ட்ரூ, கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மையர், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ் ஜூனியர்
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் (ஒருநாள் அணி கேப்டன்), சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், மைக்கேல் பெப்பர் (ஒருநாள் அணி), ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத்.
Win Big, Make Your Cricket Tales Now