WI vs AUS, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஜூலை 15) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஜூலை 15) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
- இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயிண்ட் லூசியா
- நேரம் - அதிகாலை 5 மணி
போட்டி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ்
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி புது உத்வேகத்துடன் நான்காவது டி20 போட்டியில் களமிறங்கவுள்ளதுஇ.
அணியின் கிறிஸ் கெயில், சிம்மன்ஸ், ஃபிளட்சர், ஹெட்மையர், பூரன், ரஸ்ஸல் என அதிரடி ஆட்டக்காரர்கள் அணியில் இருப்பதால், நிச்சயம் இப்போட்டியில் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் பந்துவீச்சில் டுவைன் பிராவோ, ஹெய்டன் வால்ஷ் ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் மற்ற பந்துவீச்சாளர்களும் தங்களது பணியை செய்யும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆணி ஒயிட் வாஷ் செய்யும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 தொடரை இழந்துள்ளது.
மிட்செல் மார்ஷ், ஹென்ரிக்ஸ், மேத்யூ வேட், ஜோஷ் பிலிப் என டி20 ஸ்பெஷலிஸ்டுகள் அணியில் இருந்த போதிலும் அந்த அணியால் டி20 தொடரை தக்கவைக்க முடியவில்லை.
மேலும் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், டேனியல் கிறிஸ்டியன், ஆண்ட்ரூ டை உள்ளிட்டோருடன் ஆடம் ஸாம்பாவும் அணியில் இடம்பிடித்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு ஓரளவேனும் நம்பிக்கையை அளித்து வருகிறது.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 14
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 9
- ஆஸ்திரேலியா வெற்றி - 5
உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ்- லென்ட்ல் சிம்மன்ஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ஹேய்டன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், ஓபட் மெக்காய்.
ஆஸ்திரேலியா - மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச் (கே), மிட்செல் மார்ஷ், ஜோஷ் பிலிப், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், மேத்யூ வேட்
- பேட்ஸ்மேன்கள் - ஷிம்ரான் ஹெட்மையர், கிறிஸ் கெய்ல், ஆஷ்டன் டர்னர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
- ஆல்ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ, ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்செல் மார்ஷ்
- பந்து வீச்சாளர்கள் - ஹேய்டன் வால்ஷ், ஜோஷ் ஹேசில்வுட்.
Win Big, Make Your Cricket Tales Now