
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜனவரி 03) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தற்போது வரை 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் இருந்து தனக்கு தானே ஓய்வளித்துக்கொண்டார். ஏனெனில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகள் அதிகரிக்கத் தொடங்கின.