
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியனது இன்று (டிசம்பர் 12) செயின்ட் கிட்ஸி உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமீய் சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிட்டன் தாஸும் ரன்கள் ஏதுமின்றிம் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் சௌமீயா சர்க்காருடன் இணைந்த கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 73 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 77 ரன்கள் எடுத்த கையோடு மெஹிதி ஹசன மிராஸும் விக்கெட்டை இழந்தனர்.