
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் அதற்கான பதிலடியை டி20 தொடரில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஒருநாள் தொடரை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரையும் கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணியின் கணிப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.