
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இதன் மூலம் உலகக்கோப்பை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தீவிரமாகி வருகிறது. சொந்த மண்ணில் இந்தியா களமிறங்குவதால் 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்தியா மீண்டும் உலகக்கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2019 உலகக்கோப்பையில் விளையாடிய பேட்டிங்கை மீண்டும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் சதம் உட்பட 5 சதங்களை விளாசி 648 ரன்களை ரோஹித் சர்மா குவித்தார். இதனால் வரும் உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் சர்மா அதிக சதங்களை விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “நான் 5 சதங்கள் விளாசியும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவில்லை. யார் எத்தனை சதங்கள் அடிக்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களின் கவனம் அனைத்தும் உலகக்கோப்பையை வெல்வதில் தான் உள்ளது. நான் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று கவனம் செலுத்துவேன். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில் விளையாட முயற்சித்து வருகிறார்.