
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாஅக இன்று அறிவித்து, பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிறப்புவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஷுப்மன் கில் தனது எக்ஸ் பதிவில், “நான் உங்களுக்காக எழுதும் எதுவும் நான் என்ன உணர்கிறேன் அல்லது நீங்கள் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தை ஒருபோதும் உண்மையிலேயே பிரதிபலிக்காது. நான் 13 வயதில் நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்த்து, அந்த வகையான ஆற்றலை யாராவது எப்படி மைதானத்திற்கு கொண்டு வர முடியும் என்று யோசித்துள்ளேன்.