
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் இன்று நடைபெறற 4ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனாவும், ஷோபி டிவைனும் களம் இறங்கினர். அதிரடியாக தொடங்கிய பெங்களூரு அணியின் டிவைன் அவுட் ஆன பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷோபி டிவைன் 16 ரன், மந்தனா 23 ரன், திஷா கசாட் 0 ரன். எலிஸ் பெர்ரி 13 ரன், ஹெதர் நைட் 0 ரன் என 71 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அனுஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இதில் அனுஜா 22 ரன்னிலும், ரிச்சா கோஷ் 28 ரன்னிலும் அவுட் ஆகினட். இதையடுத்து ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஷூட் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாகா ஆடிய ஸ்ரேயங்கா 15 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.