பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனை படைக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024-25: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) வியாழக்கிழமை முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய அணியின் தங்கள்து அணியின் பிளெயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. அதேசமயம் இந்திய அணியிலும் சில மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Trending
2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்
அதன்படி நடப்பாண்டில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக 14 டெஸ்ட்களில் 27 இன்னிங்ஸ்களில் 52.48 என்ற சராசரியுடன் 1312 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு, அவர் டெஸ்ட் வடிவத்தில் அதிக ரன்களை அடித்ததன் அடிப்படையில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். இப்போது இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 17 டெஸ்டில் 1556 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். ஒருவேளை ஜெய்ஸ்வால் இப்போட்டியில் 245 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளி நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக சதனை படைக்கவுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ரன்கள்
இதுதவிர்த்து 2024 ஆம் ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக சர்வதேச ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பதிவுசெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த பட்டியலில் இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து 46 போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 11 அரை சதங்களுடன் 1804 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து இந்த பட்டியலில் இந்திய அணியின் யஷஸ்வின் ஜெய்ஸ்வால் 22 போட்டிகளில் 35 இன்னிங்களில் 3 சதங்கள், 9 அரைசதங்கள் என 1605 ரன்களைஅக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் மெல்போர்ன் டெஸ்டில் 200 ரன்கள் எடுத்தால், இந்த ஆண்டு அதிக சர்வதேச ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைப்பார். நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் யஷஸ்வி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 6 இன்னிங்ஸில் 38.60 சராசரியுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார், அதில் ஒரு சதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தத்தில், 2024 ஆம் ஆண்டை மறக்க முடியாததாக மாற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now