டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் இளம் வீரர் யஷஸ்வி ஜெஸ்வால். அதன்காரணாமாக அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்தார். முதற்கட்டமாக டெஸ்ட் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளதி. டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்த தொடரில் தேர்வுக்குழுவினர் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர். குறிப்பாக மூத்த வீரர் சட்டேஷ்வர் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 வயதாகும் அவர் மும்பை, மேற்கு மண்டலம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
நாளைய ஆட்டத்தில் இவரும் ரோஹித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now