
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் தொடக்க ஆட்டக்காரராக நிலையான இடத்தை பிடித்துவிட்ட இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஐபிஎல் சீசனில், சிறப்பாக செயல்பட, அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்திய அணிக்கும் தேர்வாகி முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ஆனால் இவர் குறித்த ஒரு செய்தி அவர் மிளிரத்தொடங்கிய நாள் முதலே வந்து கொண்டிருக்கிறது.
அவர் தந்தை ஒரு பானி பூரி வியாபாரி என்றும், இவர் அந்த கடையில் வேலை செய்வது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலாகி இருந்தது. ஆனால் தற்போது அவரது சிறு வயது கிரிக்கெட் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் அதனை மறுத்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வால் தெருக்களில் பானி-பூரி விற்றதாக வைரலான செய்தியை பார்த்து மனமுடைந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2013-இல் ஆசாத் மைதானத்தில் என்னைச் சந்தித்தார், அவர் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. அவரது தந்தை மிகவும் கடினமாக உழைத்த நிலையிலும் வறுமையில்தான் இருந்தார். ஆசாத் மைதானத்தில் பானி-பூரி தள்ளுவண்டிகள் இருக்கும். ஜெய்ஸ்வால் நண்பர்களுடன் சென்று அவர்களுடன் பேசி பழக்கமானவர். சில சமயங்களில் அந்த கடைகளில் பானி பூரிகளை விற்று 20-25 ரூபாய் சம்பாதிப்பார்.