
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டாக்கா நகரில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
அதே வேளையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த தொடரிலும் அவரது சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.