ZIM vs IND: ஜிம்பாப்வே புறப்பட்டது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் ஜிம்பாப்வே புறப்பட்டது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
அதேசமயம் இத்தொடருக்கான சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்களான ரியான் பார்ல், கிரேய்க் எர்வின், சீன் வில்லியம்ஸ், ஜெய்லார்ட் கும்பி உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிகபடியான இளம் வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்திருப்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
— BCCI (@BCCI) July 1, 2024
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது இன்றைய தினம் ஜிம்பாப்வே புறப்பட்டுள்ளது. அதன்படி அணியின் கேப்டன் ஷுப்மன் கில், பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களின் புகைப்படங்களை பிசிசிஐ தங்களது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. இருப்பினும் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே உள்ளிட்ட வீரர்கள் எப்போது ஜிம்பாப்வே செல்வார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் கோங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெல்லிங்டன் மஸகட்ஸா, பிராண்டன் மவுடா, பிளேஸ்ஸிங் முசரபானி, தியான் மேயர்ஸ், ஆன்டும் நக்வி, ரிச்சர்ட் ந்ங்கராவா, மில்டன் ஷும்பா.
இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ஷிவம் தூபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஜிம்பாப்வே - இந்திய போட்டி அட்டவணை
- ஜூலை 06 - முதல் டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
- ஜூலை 07 - இரண்டாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
- ஜூலை 10 - மூன்றாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
- ஜூலை 13 - நான்காவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
- ஜூலை 14 - ஐந்தாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Win Big, Make Your Cricket Tales Now