நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை சென்ற இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. மீண்டும் ஒரு முறை இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் இந்திய அணியில் பல குழப்பங்களும் ஏற்பட்டு வருகிறது. அதிரடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை அணியில் இருந்து ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் யார் யார் விளையாட போகிறார்கள்.? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதே போல் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜாஹீர் கான், “டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்டதால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கான தனது அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணிக்கு அதிக நேரம் இல்லை. என்னை பொறுத்தவரையில் அனுபவ வீரர்களுக்கே இந்திய அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய அணி ரோஹித் சர்மாவை நீக்கினாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ரோஹித் சர்மா பேட்டிங், கேப்டன்சி என அனைத்திலும் அனுபவம் வாய்ந்த வீரர்.