ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது.
Trending
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - தடிவானாஷே மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 37 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் ம்ருமணி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 21 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரையன் பென்னட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் தியான் மெயார்ஸ் 3 ரன்னிலும், ரியான் பார்ல் ஒரு ரன்னிலும், கிளைவ் மடாண்டே 9 ரன்னிலும், தஷிங்கா ரன்கள் ஏதுமின்றியும், வெல்லிங்டன் மஸகட்ஸா 3 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் ஜிம்பாப்வே அணி 12.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுஃபியான் முகீம் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுதவிரா அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், அப்ராஸ் அஹ்மத், ஹரிஸ் ராவுஃப், சல்மான் அலி ஆகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுஃப் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றர். இதில் ஒமைர் யூசுஃப் 22 ரன்களையும், சைம் அயூப் 36 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியி வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இதில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுஃபியான் முகீம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now