Advertisement

ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 01, 2025 • 08:26 PM

Zimbabwe vs South Africa 1st Test: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் கார்பின் போஷ் பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 01, 2025 • 08:26 PM

தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்களையும், கார்பின் போஷ் 100 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களையும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 137 ரன்களையும், கேப்டன் கிரேய்க் எர்வின் 36 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களைக் கூட தாண்டமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இத்னால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானாலும் ஃபாலோ ஆனைத் தவிர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், கோடி யூசுஃப் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து 167 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் வியான் முல்டர் சதமடித்ததுடன் 17 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 147 ரன்களையும், கேஷவ் மஹாராஜ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் வெலிங்டன் மஸகட்சா 4 விக்கெட்டுகளையும், சிவாங்கா மற்றும் விசென்ட் மஸகட்சா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்ததிருந்தது. இதில் பிரின்ஸ் மஸ்வௌரே 5 ரன்களுடனும், நிக் வெல்ச் ரன்கள் ஏதுமின்றியும் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் வெல்ச் ரன்கள் ஏதுமின்றியும், மஸ்வௌரே 12 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 26 ரன்களிலும், முதல் இன்னிங்ஸில் சதமடித்த சீன் வில்லியம்ஸ் 49 ரன்னிலும், வெஸ்லி மதவெரே மற்றும் தஃபட்ஸ்வா சிகா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் வெலிங்டன் மஸகட்சா அரைசதம் கடந்ததுடன் 57 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிளெசிங் முஸரபானி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 208 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement