
South Africa Playing XI: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர்கள் டெவால்ட் பிரீவிஸ் மற்றும் லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.
அதிலும் குறிப்பாக வழக்கமான கேப்டனுக்கு பதில் கேசவ் மஹாராஜ் தலைமையில் அந்த அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற கணிப்புகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் ஜிம்பாப்வே அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வலுவான தென் ஆப்பிரிக்க அணியை எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.