
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அணியில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய அறிமுக வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது. மேற்கொண்டு நடப்பு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டரி சிக்கந்தர் ரஸா தொடர்கிறார். இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ரியான் பார்ல், ஜெய்லார்ட் கும்பி, கிரேய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் போன்ற அனுப்வ வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
Zimbabwe include Naqvi in squad for T20I series against India
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 1, 2024
Details https://t.co/MYR4waitsL pic.twitter.com/6pIg6AYy12