
Zimbabwe vs Sri Lanka 2nd T20I: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா மற்றும் பிராட் எவான்ஸ் அகியோர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் ஒரு ரன்னிலும், பதும் நிஷங்கா 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கமில் மிஸாரா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின் 20 ரன்னில் கமில் மிஸாராவும், ஒரு ரன்னிலும் நுவனிந்து ஃபெர்னாண்டோவும், கடந்த போட்டியில் அசத்திய கமிந்து மெண்டிஸ் இந்த ஆட்டத்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.