akash deep
நோ-பாலில் தவறவிட்ட முதல் விக்கெட்; தவறை திருத்தி கம்பேக் கொடுத்த ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தனது வாய்ப்பை பெற்றார். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
அப்பாது இன்னிங்ஸின் நான்காவது ஓவரை வீசிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது அபார பந்துவீச்சின் மூலம் ஸாக் கிரௌலியை க்ளீன் போல்ட்டாக்கினார். தனது முதல் சர்வதேச விக்கெட்டை ஆகாஷ் தீப் சக வீரர்களுடன் இணைந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் ஆகாஷ் தீபின் பந்துவீச்சை மூன்றாம் நடுவர் சோதிக்க, அது நோ-பால் என்பது தெரியவந்தது.
Related Cricket News on akash deep
-
4th Test Day 1: அறிமுக போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை - ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47