international cricket council
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மூன்றாவது முறையாக அப்பதியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையைப் பெறவுள்ளார்.
Related Cricket News on international cricket council
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது. ...
-
ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் அனுமதி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
‘டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது’ - மைக்கேல் ஹோல்டிங் விளாசல்!
டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் மிகக்கடுமையாக விளாசியுள்ளார். ...
-
#Onthisday: சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளைக் கடந்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 23ஆவது வருடத்தில் காலடி எடுத்திவைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24