monank patel
CWCL 2: மேக்ஸ் ஓடவுட், கைல் கெலின் அபாரம்; அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லெவிட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஓடவுட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 18 ரன்களுக்கும், முஸா அஹ்மத் 5 ரன்களுக்கும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 2 ரன்களுக்கும், நோஹா கிராஸ் 27 ரன்களுக்கும், கைல் கெலின், ஆர்யன் தத், கிளேட்டன் ஃபிலாய்ட் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on monank patel
-
CWCL 2: மொனாங்க் படேல், கென்ஜிகே அசத்தல்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான் - மொனாங்க் படேல்!
உலகக் கோப்பையில் விளையாடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. அதனால் ஒவ்வொரு பந்திலும் நாங்கள் எங்களுடைய அனைத்து முயற்சியையும் கொடுத்துள்ளோம் என்று அமெரிக்க அணி கேப்டன் மொனாங்க் படேல் தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ...
-
அதிரடி காட்டிய அமெரிக்கா; போராடி தோற்ற கனடா!
கனடா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
அமெரிக்க அணியை வழிநடத்தும் இந்திய வீரர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்தியர் நியமனம்!
அமெரிக்க கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24