zak crawley
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இங்கிலாந்து; டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 மேஜிக் மீண்டும் நிகழ்த்துவோம் என்று கூறி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமானது. அந்த நிலைமையில் இன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி – பென் டக்கெட் ஆகியோர் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவர் பிளே போல ஆரம்பம் முதலே அதிரடியாக குவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை தோற்கடித்த அதே யுக்தியை இப்போட்டியிலும் கையாண்ட இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியான பவுண்டரிகளை தெறிக்க விட்டது.
Related Cricket News on zak crawley
-
PAK vs ENG, 1st Test: பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டும் கிரௌலி, டங்கெட் இணை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 174 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs SA, 3rd Test: வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து!
3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 130 ரன்கள் என்ற எளிய இலக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: இங்கிலாந்துக்கு 378 டார்கெட்; தொடக்க வீரர்கள் அதிரடி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs ENG,1st Test (Day 5): விண்டீஸுக்கு 286 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs ENG, 1st Test(Day 4): கிரௌலி, ரூட் அபாரம்; முன்னிலையில் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜாக் கிரௌலி சதமடித்து அசத்தினார். ...
-
ENG vs PAK, 1st ODI: டேவிட் மாலன், கிரௌலி அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47