Akash deep
IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் நீடிக்கும் என்பதால் அவர்களும் கடும் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக மூன்றாவது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுல் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். மேலும் அவரது உடற்தகுதையை பொறுத்தே ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம்பிடிப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
Related Cricket News on Akash deep
-
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை - ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப்!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24