As prime minister narendra modi
இந்திய அணியை பாரட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வெற்றி அணிவகுப்பையும் மேற்கொண்டது.
Related Cricket News on As prime minister narendra modi
-
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய பிரதமர் நரேந்திய மோடி தொடரின் சாம்பியன் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கிய பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24