Australian cricket team
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராஃப்ட் உப்புத்தாள் கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயன்றது அங்கிருந்த கேமராவின் மூலம் அம்பலமானது. பந்து ‘ஸ்விங்’ ஆவதற்கு வசதியாக அவர் இவ்வாறு செய்ததும், இந்த திட்டத்தின் பின்னணியில் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருந்ததும், அதனை கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்டுக்கு 9 மாதமும், ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதித்தது.
இந்த விவகாரத்தில் பான்கிராப்ட் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய புயலை கிளப்பி உள்ளார். தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பந்தை நான் தேய்த்தது பவுலர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தான். எனவே இந்த விஷயம் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த பவுலருக்கு தெரியும் என்று சொல்லவில்லை.
Related Cricket News on Australian cricket team
-
தனக்கு பிறகு ஸ்மித்திற்கு கேப்டன்சி கிடைக்க வேண்டும் - டிம் பெய்ன்
தனக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வேண்டும் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ...
-
மாலத்தீவிற்கு படையெடுக்கும் ஆஸி வீரர்கள், காரணம் இதுதான்!
ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24