Fitness update
நாளை ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவார் - ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Fitness update
-
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!
தொழில்முறை கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது முதல் ஆட்டத்தை நாளை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் - பிசிசிஐ!
ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
-
தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
என்னுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன் - விபத்து குறித்து மனம் திறந்த ரிஷப் பந்த்!
விபத்தின் போது என் வாழ்வில் முதல்முறையாக இந்த உலகில் என்னுடைய நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன் என்று இந்திய வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47