Advertisement
Advertisement

Indian premier league 2024

ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
Image Source: Google

ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!

By Bharathi Kannan April 03, 2024 • 19:46 PM View: 154

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடைபெற்றுவரும் லீக் போட்டிகளிலேயே ஒவ்வொரு அணியும் வெற்றியை ஈட்டி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறது. 

இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. 

Related Cricket News on Indian premier league 2024