International league
ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட கொஸ்; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்படும் ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வைப்பர்ஸ் அணிக்கு கேப்டன் காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக தொடங்கினர். இதில் ஹேல்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 22 ரன்களில் முன்ரோவும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸும் 19 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஆடம் ஹோஸ் - வநிந்து ஹசரங்கா இணை ஓரளவு நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on International league
-
ஐஎல்டி20 2024: குர்பாஸ், ரஸா அபாரம்; எமிரேட்ஸை பந்தாடியது கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் ஏமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24