J1 league
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; அதிரடி வீரரை தட்டித்தூக்கிய கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்ட வருகிறது. அதன்படி வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதேசமயம் இத்தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.
Related Cricket News on J1 league
-
அதிரடியாக விளையாட எனக்கு சிறப்பு மந்திரம் எதுவும் இல்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச அளவில், ரன் சேஸை எப்படி கணக்கிடுவது என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்கோர் போர்டில் ஒரு ஓவரில் 10 ரன்கள் தேவை என்றால், நீங்கள் அதற்கேற்ப பேட்டிங் செய்வீர்கள் என மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் எப்போது? - அருண் தூமல் பதில்!
நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தை நடத்துவோம் என்று ஐபிஎல் நிர்வாக தலைவர் அருண் தூமல் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் லாகூர் கலந்தர்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: ஹர்மன்ப்ரீத் கவுர் அபார ஆட்டம்; குஜராத்தை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: அரைசதம் கடந்த ஃபகர், ஷஃபிக்; கராச்சி கிங்ஸ் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: ஹேமலதா, மூனி அரைசதம்; மும்பை அணிக்கு 191 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி; யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 2 days ago