Karnataka ranji trophy
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!
இந்தியாவில் நடைபெற்றுவரும் நடபாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்று வந்த முதலாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா மற்றும் கர்நாடகாக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியானது அதர்வா டைடே மற்றும் கருண் நாயரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 460 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதர்வா டைடே 109 ரன்களையும், கருண் நாயர் 90 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணியில் சமர்த் 59, நிகின் ஜோஸ் 82 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 286 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
Related Cricket News on Karnataka ranji trophy
-
ரஞ்சி கோப்பை 2024: அஜித் ராம் அபார பந்துவீச்சு; கடின இலக்கை நோக்கி விளையாடும் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவிற்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: தேவ்தத் படிக்கல் சதம்; வலிமையான நிலையில் கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை: இறுதிப்போட்டிக்கு பெங்கால், சௌராஷ்டிரா அணிகள் முன்னேற்றம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனில் பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47