Advertisement
Advertisement

Kl rahul

KL Rahul has been ruled out of IPL 2023 and is likely to miss WTC Final!
Image Source: Google

அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்; கலக்கத்தில் இந்தியா!

By Bharathi Kannan May 05, 2023 • 13:37 PM View: 263

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்  போட்டியில் பங்கேற்கிறது. கடந்த முறை நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, தற்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது எந்த வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை.

Related Cricket News on Kl rahul