Advertisement
Advertisement

Kl rahul

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்; உடற்தகுதியில் பின்னடைவு?
Image Source: Google

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்; உடற்தகுதியில் பின்னடைவு?

By Bharathi Kannan July 18, 2023 • 14:15 PM View: 187

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி நிற்கும் வீரர்கள் கம்பேக் கொடுக்க வேண்டுமெனில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். 

ஏற்கனவே பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ரிஷப் பந்த் என பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வேளையில் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறுவதற்காக பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது பயிற்சியை துவங்கி விட்டனர். ஆனால் கே.எல் ராகுல் தற்போது பேட்டிங் பயிற்சியை துவங்கி விட்டாலும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது.

Related Cricket News on Kl rahul