Odi tri
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கிளென் பிலீப்ஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானிற்கு 331 ரன்கள் இலக்கு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திராவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்த நிலையில், 3ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Odi tri
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
விராட் கோலி, ஹாசிம் அம்லா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
முத்தரப்புல் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய தென் அப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் காயம் காரணமாக ஜெரால்ட் கோட்ஸில் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24