Advertisement
Advertisement

Pakistan tour australia 2023 24

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
Image Source: Google

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!

By Bharathi Kannan December 26, 2023 • 14:27 PM View: 117

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். பின் 38 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வார்னரும், 42 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

Related Cricket News on Pakistan tour australia 2023 24