Philip salt
பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய முகமது சிராஜ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவு செய்து இந்த சீசனில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தை காலி செய்து 9ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 181/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும் மஹிபால் லோம்ரர் 54 ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய டெல்லிக்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியுடன் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் டேவிட் வார்னர் 22 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் அபாரமாக செயல்பட்டு 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் அரை சதமடித்து 87 ரன்கள் குவித்தார்.
Related Cricket News on Philip salt
-
ஐபிஎல் 2023: தாண்டவமாடிய சால்ட்; ஆர்சிபியை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சால்ட்டுடன் மோதலில் ஈடுபட்ட முகமது சிராஜ்; வைரல் காணொளி!
ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆர்சிபி விரர் முகமது சிராஜ், பிலிப் சால்டிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
BAN vs ENG, 1st T20I: ஜொஸ் பட்லர் அரைசதம்; வங்கதேசத்திற்கு 157 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG, 6th T20I: சால்ட் காட்டடி; தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 6ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NED vs ENG, 2nd ODI: ராய், சால்ட் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி!
England vs Netherlands: நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தோடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
டி10 லீக்: கெயில், சால்ட் அதிரடியில் டீம் அபுதாபி வெற்றி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24